எர்லாங்கன் ஹெர்சோ தமிழ்ப்பள்ளி
- சிறுகதைகள், புதிர்கள், பாடல்கள், தமிழ் வார்த்தை விளையாட்டுக்கள் மற்றும் ஆர்வம் மிக்க உரையாடல்கள் மூலம் நமது குழந்தைகள் எளிமையான முறையில் தமிழ் கற்க ஒரு அருமையான வழி.
- ஐந்து வயது முதல் உள்ள தமிழ்க் குழந்தைகளுக்கு அடிப்படை மற்றும் இடைநிலை வகுப்புகள் தன்னார்வமுள்ள ஆசிரியர்களால் கற்பிக்கப்படுகிறது.
- தமிழக அரசின் சமச்சீர் கல்வி பாடத்திட்ட முறையில் குழந்தைகளுக்கு தமிழ் மொழி பயிற்றுவிக்கப்படுகிறது.
- கல்வி பயிலும் மாணவ,மாணவியருக்கு அவர்களை ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு கல்வியாண்டின் இறுதியிலும் எர்லாங்கன் ஹெர்சோ தமிழ்ச்சங்கம் சார்பாக கல்விச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றது.
- ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் புதிய மாணவ,மாணவியர் சேர்க்கை நடைபெறும்
மாணவர் சேர்க்கைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: erhtamilsangam@gmail.com